Pages

Saturday, August 6, 2011

பட்ஜட் 2011 - ஆச்சர்யம் ஆனால் உண்மை! - 1

செய்தி இரண்டொழிய வேறில்லை என்றாகிவிட்டது. தமிழ்நாட்டில் இப்போது ஐய்யா செய்தி, அம்மா செய்தி என இரண்டு விதமான செய்திகள் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. பட்ஜட்டில் உள்ள பிளஸ் என்ன, குறை என்ன என்று ஒரு நடுநிலை செய்தியை யாரும் வெளியிடுவதில்லை. பத்திரிக்கைகளையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஜெ., அரசியலில் சிறிது பக்குவம் அடைந்துள்ளார் என பட்ஜட்டில் வரவேண்டிய வரிகளை முன்பே அறிவித்துவிட்டு இப்போது வரி இல்லா பட்ஜட் அறிவித்து நிருபித்துள்ளார். இல்லாவிட்டால் எல்லா பட்ஜட்களையும் போல வரிகளைப் பற்றி மட்டுமே அனைவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். பட்ஜட்க்கு முன் வரிகள் அறிவிப்பது பொதுவாக வரிகளின் அளவை பிரித்து பட்ஜட்க்கு முன் ஓர் அறிவிப்பும், பட்ஜட்டில் ஓர் அறிவிப்பும் செய்வார்கள். இப்போது அப்படி நடக்கவில்லை.

பட்ஜட்டில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகளை அம்மா செய்திகள் தூக்கிப்பிடிக்கின்றன. தனியார் பள்ளிமாணவர்களுக்கு இது பொருந்துமா என தெரியவில்லை. இப்போது மாதம் இவ்வளவு ரூபாய் என்று மாணவர்கள் கையில் பணம் புரள்வது எவ்விதமான‌ விளைவை ஏற்படுத்துமென பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பணமாய் கொடுப்பது மாணவர்கள் குடும்பத்தின் பணத்தேவைக்காக படிப்பை பாதியில் விட்டு வேலைக்குச் செல்ல நேரிடும் அவலத்தை துடைக்கத்தான் ஆனால் இவ்வழி உதவுமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும்.


மாணவர்கள், ஏழைகள் என மக்களின் மீது கருணைப் பார்வை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ. என்பதே ஆச்சர்யமான விசயம்தான். பார்க்கலாம் எத்தனை நாள்கள் என்று!

Click here to download பட்ஜட் as pdf

No comments:

Post a Comment