Pages

Sunday, July 17, 2011

அம்மாவின் "துக்ளக் தர்பார்" !

அம்மா எப்படி என்பது எல்லொருக்கும் தெரிந்த விசயம்.  அவருக்கே தெரியாத விசயம் அவரால் கட்டுப்படுத்த முடியாதபடி செயல்படும் அதிகார மையத்தை தவிர்ப்பதெப்படி என்பது தான்.

"அதிகார மையம்" யார் என கேட்கும் அப்பாவிகள் மன்னார்குடி போய் 1/4 கிலொ மல்லாட்டை சாப்பிட்டு வாருங்கள்!

அம்மா வெற்றி பெற்றது அவரின் திறமையோ, புத்திசாலித்தனமோ, கூட்டணியோ (மட்டும்?!) காரணமல்ல என அவருக்கும், அனைவருக்கும் தெரிந்த உண்மை.  மக்கள் கருணா மீதான கோபத்தில் ஆட்சி மாற்றம் தேவை என கொடுத்த வாய்ப்புதான் இது.

ஆரம்பத்திலேயே இதை உணர்ந்துதான் பேசி, செயல்பட்டு வந்தார் ஜெ. என்றாலும் தற்போது காணக் கிடைக்கும் காட்சிகள், விரைவிலேயே ஜெ மக்களில் அதிருப்தியை சம்பாதித்து விடுவார் என தோன்றுகிறது.

ஜெ எப்போதும் மக்களுக்குத் தேவையான, சரியான திட்டங்கள் தீட்டி, தீவிரமாய் நடைமுறைப் படுத்துவார் என பெயர் பெற்றவர்.  இம்முறை, அவர், நீண்டகால திட்டங்கள், தொலை நோக்கு பார்வை தேவைப்படுகிற திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது தவறல்ல, மின்சார பற்றாக்குறையை போக்க எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி, அவை பலனளிக்க ஆரம்பிக்கும் வரை மக்கள், அறியவோ, பாரட்டவோ போவதில்லை, மாறாக சட்டம் ஒழுங்கு போன்ற தினசரி பிரச்சனைகளில் மக்கள், ஆட்சி மாற்றத்தை உணரும் விதமாக நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே ஜெ பாமர மக்களின் நன்மதிப்பை பெறமுடியும்.

ஓர் அர‌சின் நடவடிக்கைகளின் விளைவை ம‌க்க‌ள் உணரும் விதமாக அரசு அறிவிப்புகள் வெளியிட‌ ‌வேண்டும்.  க‌ருணாவிற்கு "PR skills" கைவ‌ந்த‌ க‌லை, ஜெ க்கு இத்த‌னை ஆண்டு அனுப‌வ‌த்திற்குப் பிற‌கும் கை வ‌ராத‌ க‌லை இது.

ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்வதற்கும், அரசு நிர்வாகத்திற்குமான வித்தியாசத்தை ஜெ உணர்ந்ததாகத் தெரியவில்லை.

படித்த மக்களிடம் கூட ஜெ அர‌சு இருந்த ந‌ல்ல‌ பெயரையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.  IAS, IPS அதிகாரிகள் தினமும் காலையில் ஜெயா டீவி பார்த்துதான் தாங்கள் எந்த பணியில், எந்த ஊரில் இன்று பணியாற்ற வேண்டும் என்பது அரசைப் பார்த்து, அதிகாரிகளைப் பார்த்து, மக்கள் நகைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது 

மந்திரிகள் பாடு அதை விட மோசம்!

துக்ளக் "சோ" தான் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டதாக பலர் பெருமை பேசிக்கொள்கின்றன்ர்.  அது ஜெ அரசுக்கு அவமானமில்லை ஆனால் இது "துக்ளக் அரசு/தர்பார்" என்று சொல்ல நேர்ந்தால் அது அவமானம்; உடனே ஜெ உஷாராகவில்லையென்றால் "இது துக்ளக் தர்பார்" என்று முதலில் துக்ளக் "சோ"  சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

5 comments:

  1. நல்லாத்தான் தலைப்பை பிடிக்கிறீங்க, கடைசி பாரால தலைப்பை தொட்டுடீங்க?

    ReplyDelete
  2. //நல்லாத்தான் தலைப்பை பிடிக்கிறீங்க//

    நன்றி அரசு,

    பாரட்டா? நையாண்டியா?

    கட்டுரை தலைப்பைப் பற்றி தானே பேசுகிறீர்?! புடவை தலைப்பைப் பிடித்தால் தானே தவறு?

    ReplyDelete
  3. சமச்சீர் கல்வி விடயத்திலேயே பெயர் கெட்டுப் போய் விட்டது. இப்போது வரி உயர்வு வேறு. மேலும் மின் கட்டணம் உயரப் போகிறது. வாழ்க தமிழ் "மாக்கள்".

    ReplyDelete
  4. கடவுள் ! வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும் ந‌ன்றி !

    பேருந்து க‌ட்ட‌ண‌மும் அந்த‌ வ‌ரிசையில் அடுத்து காத்திருக்கிற‌து

    ReplyDelete
  5. ரஜினி எப்போதும் ஒரு ஐபிஎஸ் வேண்டும் தேவைப்பட்டது, ஆனால் காரணமாக சில காரணங்களுக்காக அவர் தனது கனவை நிறைவேற்ற முடியவில்லை. எந்த ஒரு வழியாக வெளியே பயனுள்ள பலவீனமாகிவிட்டது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
    http://bit.ly/n9GwsR

    ReplyDelete