Pages

Saturday, January 1, 2011

அன்ன‌தான‌ச் சாப்பாடின் விலை Rs. 199

இது புத்தாண்டின் முந்த‌ய‌ இர‌வில் ந‌டைபெற்ற‌ நிக‌ழ்ச்சி.

ம‌டிப்பாக்க‌ம் ப‌சார் சாலையில் ஒரு உண‌வ‌க‌ம் உள்ள‌து.  முன்பு அங்கு வேறு உண‌வ‌க‌ம் இருந்த‌து. அங்கு உண‌வும் ந‌ன்றாக‌ இருந்த‌து.  இங்கு உண‌வ‌ருந்த‌ என் ந‌ண்ப‌ரும், அவ‌ரின் ம‌னைவியும் அழைத்தனர்.

வேளச்சேரி ஆர்த்தி பவன் எங்களுடைய விருப்பமாயிருந்தது. இருந்தாலும் நானும் என் மனை‌வியும் வ‌ர‌ ஒப்புக்கொண்டு ம‌டிப்பாக்க‌ம் சென்றோம்.

எங்க‌ளுக்கு முன்பே அங்கு வ‌ந்து விட்ட‌ ந‌ண்ப‌ர், இன்று இங்கு பஃபே இலவசம் என்று சொன்னார்.  நாங்கள் அப்போது ஆர்த்தி பவன் அருகில் வந்திருந்தோம். என் மனைவி அன்னதானமெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்றார்.

நல்ல பார்த்தியான்னு நான் கேட்டேன்.

நல்லாப் பார்த்தேன்னு  சொன்னான். 

சரி அப்போ அ. ஆனந்தபவன் போலாம்ன்னு சொன்னேன்.

அவன் டேய் அங்க பஃபே வழக்கமா ரூ. 99 தான் ஆனால் இன்று 175 ரூபாய் டா என்றான்.

சரி நாம் (வழக்கமான முறையில்) வேண்டியதை ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்றேன்.

நாம் ஏன் இங்கு அதை செய்யக்கூடாது என்றான். 

என் மனைவி மனதில் மணி அடித்தது போலும், அவரை இங்க வரச்சொல்லுங்க இல்ல நாம மட்டும் இங்கே சாப்பிடலாம்ன்னு சொன்னாள். 

மனைவி சொல் மிக்க மந்திரமில்லை அல்லவா ‍(எதாவது சரியில்லாமல் போய்விட்டால் பாட்டு வாங்றது யாரு) ஆகவே அவள் சொன்னபடி அவனிடம் சொல்லிவிட்டேன். 

அவன் அங்கு சாப்பிட முடிவுபண்ணினான்.

அப்போது ப‌ள்ளிக்க‌ர‌ணையில் உள்ள‌ ஒரு ந‌ண்ப‌ர் பேசினார், அவ‌ர் அவ‌ரின் வீட்டிற்கு சாப்பிட‌ அழைத்தார். உண‌வ‌க‌த்தில் சாப்பிட‌ அழைத்து வ‌ந்து விட்டு வீட்டில் சாப்பிட்டால் என் மனைவி அடிப்பாள் என்றேன். அவரின் மனைவி என் மனைவியிடம் தொலைபேசியில் பேசி எங்களை வீட்டிற்க்கு வரவைத்து விட்டார்.

சாப்பிட்டு, பேசிவிட்டு நாங்கள் 11 மணிவாக்கில் வீடு திரும்பினோம்.  சுமார் 11:50 க்கு முதல் நண்பர் அழைத்தார். நாங்கள் சாப்பிட்டதைப் பற்றி கேட்டார், சொன்னேன்.

அவர் சாப்பிட்ட கதை கேட்ட போது தலைவர் காமெடி பீஸ் ஆனது தெரிய வந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறந்திருப்பதால், புத்தகங்களோடு சாம்பு சாசே தருவது போல ஃப்ரீ பஃபெ என நினைத்து உள்ளே சென்றுள்ளன‌ர். நன்றாக சாப்பிட்ருக்கிறார்கள்.

சாப்பிட்டு முடிக்கும் வேளையில் பில் தலைக்கு ரூ. 199 என்று சொல்லவும். நண்பரின் மனைவி செம டென்ஷன் ஆகியிருக்கிறார்.

நண்பர், ஃப்ரீன்னு போட்றுகியளே (தேவர் மகன் ரேவதியின் "மறந்திருவேன்னியளே" போல) என்று கேட்கவும், அவர்கள், 2 க்கு 1 ஃப்ரீன்னு சொல்லிருக்கார். இவர் இருவராய் இருந்ததால் ஃப்ரீ இல்லை,  பணம் கொடுத்துட்டு வந்திருக்கார்.

அங்கிருந்து கிள‌ம்பிய‌திலிருந்து அவ‌ரின் ம‌னைவி, செம அர்ச்ச‌னை செய்துள்ளார். உண‌வக‌த்துக்கார‌ருக்கு, என் ந‌ண்ப‌ருக்கும் கோடிய‌ர்ச்சனை என்று அவர் சொன்னபோது நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.  அவர் ரொம்ப‌ சிரிக்காதெ உங்க‌ளிருவ‌ருக்கும் ல‌ட்சார்ச்ச‌னை என்றார்.  நாங்க‌ என்ன‌ய்யா செய்தோம்ன்னு கேட்டால், நான்கு பேரில் ஒருவ‌ருக்கு ஃப்ரீ கிடைத்திருக்குமே.  முழு ஃப்ரீ எதிர்பார்த்ததிற்கு மூன்றிலொன்றாவது கிடைத்தது என்று மகிழ்ந்திருப்பாள். 

நல்லா இருக்கே கதை? இவங்க‌ ம‌ட்டும் ஏமாந்த‌து தான் உண்மையான‌ வ‌ருத்தாமா இருக்குமென்கிறாள் என் ம‌னைவி.

ஆக‌ மொத்த‌ம் வெறுமே ஃப்ரீன்னு போட்ட‌து அவ‌ங்க‌ த‌ப்பு, அன்ன‌தான‌த்துக்கு(?) ஆசைப் ப‌டாவிட்டாலும் ஃப்ரீ எதிர்பார்த்த‌து இவ‌ரின் தவ‌று..

நீங்கள் என்ன‌ சொல்கிறீர்க‌ள்?

No comments:

Post a Comment