Pages

Sunday, February 19, 2012

முகநூலும் மக்கள் மேலாண்மையும்

Caution: இதை விவரமாக எழுதினால் ஒரு புத்தகம் எழுதலாம், இரு பதிவில் மிக சுருக்கமாக எழுத முயற்சித்திருக்கிறேன்

மேலாண்மை என்பதற்கு "காதல்" போல, "கற்பு" போல, "பகுத்தறிவு" போல, ஒவ்வொருவரும் ஒரு விதமான அர்த்தம் கற்பிக்கிறார்கள், வரையறை வைத்திருக்கிறார்கள்.

வெற்றி பெற்றவன் சொல்லவதே சிறந்த மேலாண்மைத் தத்துவமாகிறது, அவரே பின்னர் தோற்றுவிட்டாலும் கூட இடைக்காலத்தில் அந்த தத்துவம் சிறந்த மேலாண்மைத் தத்துவமாக வலம் வந்து பலருக்கு (தவறான?) வழிகாட்டியிருக்கலாம்.

மேலாண்மை என்பது என்னைப் பொறுத்தவரை கற்றுக்கொடுக்கக் கூடியது, பயிற்றுவிக்க கூடியது, பழக்கக்கூடியது, விருப்பம் மட்டுமே தேவையானது. மேலாண்மையை கைக்கொள்ள விரும்பும் எவருக்கும் அதை நாம் அவரின் வாழ்க்கை முறையாக்கவும் முடியும்.

எந்த பேருந்தில் எப்போது ஏறுவது, எந்த உணவகத்தில் எப்போது என்ன உணவு உண்பது என்பதிலிருந்து எல்லாவற்றிலும் நாம் எல்லோரும் ஒரு மேலாளர் போல தான் செயல் படுகிறோம். அதிலிருந்து விரும்பிய விளைவைப் பெற முடிந்தால் ( வெற்றிகரமான) மேலாளர், பெறவில்லை என்றால் மேலாளர் இல்லை. முடிவுகள் சரியானதா இல்லையா என்பதை விளைவுகள் தான் தெரிவிக்கின்றன.  எத்தனை புயல்களை கடந்தோம் என்பது முக்கியமல்ல, கரை சேர்ந்தோமா என்பதே முக்கியம். மேலாளருக்கு பேச்சிலோ, செயலிலோ அல்லது இரண்டிலுமோ திறமை இருக்கலாம், விரும்பிய விளைவை பெற‌ முடிந்தால் போதுமானது.

முக‌னூல், ஒருவருக்கு மனிதர்களை மேலாண் செய்யும் திறமையை புதியதாய் அறிமுகம் செய்ய, வளர்க்க, ஒருவரை, ஒவ்வொருவரையும், மேலாளர் ஆக உருவாக்குவ‌தற்கான களமாக இருப்பதாக நினைக்கிறேன்.

கருத்திடுபவர்கள், சொந்த சரக்கோ, மண்டபத்தில் யாரோ எழுதிக்கொடுத்ததோ, பொதுவில் கிடைப்பதோ, அதை எவ்விதம் அணுகுவது என்பதிலிருந்து பலவற்றை கற்றுத்தருகிறது.

(முகனூல் தரும் வாழ்வியல் தத்துவங்களை தனியாக ஒரு பதிவிட ஆசை.)


ஒரு மேலாளருக்குத்தேவையான சில விசயங்கள் (மற்றவைகள் பகுதி -2 ல்)
1. தேர்ந்தெடுத்தலும், விட்டு விலகுதலும்.
2. செய்தியை சரியான முறையில் கொண்டு சேர்த்தல்.
3. குழு உணர்வை உருவாக்கல், குழுவை உருவாக்கி வளர்த்தல்.

4. பிரச்சனைகளை, பிரச்சனையாளர்களை கையாளுதல்.

தேர்ந்தெடுத்தலும், விட்டு விலகுதலும் (HIRE AND FIRE)

புதிய நட்பு கோரிக்கை வருகையில், அவர்களின் பதிவுகளை கொண்டு, நண்பர்களை கொண்டு, அவரைப் பற்றி புரிந்து சரியான நபரை நண்பராக தேர்ந்தெடுப்பதற்கு தொடர் வாய்ப்புகள் தருவதன் மூலம் ஒரு வேலைக்கான நபரை தேர்ந்தெடுக்கத் தேவையான திறமை வளர்க்க ஒரு களமாக இருக்கிறது.  தொடர்ந்து பிரச்சனைக்குரியவராக இருப்பவரை விட்டு விலகுவதெப்படி என்பதை கற்றுத்தருகிறது.

செய்தியை சரியான முறையில் கொண்டு சேர்த்தல் (Comm. Skills)

எவ்விதம் எழுதினால் பிறரால் மதிக்கப் படும், விரும்பப்படும் என்று உணர்ந்து நோக்கம் சிதையாமல் கருத்தை வெளிப்படுத்தக் கற்றுத்தருகிறது.  Facebookல் எல்லா கருத்துகளையும் விமர்சிக்க, பாராட்ட, தவறாக புரிந்து கொள்ள பலர் இருக்கிறார்கள், அவர்களின் கருத்துரைகளில் எவற்றுக்கெல்லாம் பதிலுரை தேவையோ அதை உணர்ந்து, பதிலுரைத்து, நம் கருத்தை வெற்றிகரமாக மற்றவர்களிடம் கொண்டு செல்ல கற்றுத்தருகிறது.

குழு உணர்வை உருவாக்கல், குழுவை உருவாக்கி வளர்த்தல்
(Team spirit and Team building)

நம்முடன் இருப்பவர்கள் (Facebook நண்பர்கள்) கூறும் சில கருத்துக்களை மதித்து, (விரும்பி (like)) நாம் கருத்துரைக்கையில் ஒரு ஒத்த கருத்துடையவர்கள் எனும் குழுமனப்பாண்மையை அது உருவாக்குகிறது.  அக்குழு பல பொது நோக்க செயல்பாடுகளை நோக்கிச் பயணிக்கும் போது குழுவில் இருக்கும் ஒவ்வருவருக்கும் அதன் வெற்றி மகிழ்ச்சியளீக்கிறது.  அக்குழுவை உருவக்கியதில் ஓவ்வொருவருக்கும் பங்கிருப்பதால் ஒவ்வொருவரும் ஒரு குழுவில் பணியாற்றுவதெப்படி என்பதை அறிகிறார்கள், குழுவை உருவாக்குவதெப்படி என கற்றுக்கொள்கிறார்கள்.


பிரச்சனைகளை, பிரச்சனையாளர்களை கையாளுதல்
(Conflict-Resolution Abilities)

சிலர் நாம் என்ன கருத்திட்டாலும் அதில் சண்டையிட காத்திருப்பார்கள்.  அப்படிப் பட்டவர்களை கையாளுகையில் ஒருவருக்கு இது போன்ற சண்டைக் கோழிகளை (flamers/trolls) எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது மற்றும் அவர்களை எப்படி கையாள்வது என்பதை நமக்கு எளிதாக‌ கற்றுத்தருகிறது.

---------------------------------------------------------------------------------------------
கடுமையான விமர்சனங்கள் இனிதே வரவேற்கப்படுகின்றன‌
---------------------------------------------------------------------------------------------
அடுத்த பகுதியில்..
பொதுதளத்தில் கலந்து பழகுதல் - நாகரீம், மரியாதை முறைகள், மற்றும் பல..