Pages

Tuesday, January 18, 2011

கவிதை எழுதலாம் வாருங்கள்...! பகுதி - ஆ

பகுதி ஆ பிரசுரிக்க தாமதமானதற்கு மன்னிக்கவும் !

ஹைக்கூ அனைவருக்கும் புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.

அடுத்தது.. வசன கவிதை!

உலகிலேயே மிக எளிதானதும், மிக கடினமானதும் இது தான்!!!

அது எப்படின்னு கேட்கிறீர்களா?

எழுத எளிதானது.. ஏன் ##கடினமென்று இறுதியில் கூறுகிறேன்.

முதலில் உதாரண கவிதையய் பார்ப்போம்

*********************************
க‌ட்டுரைக‌ளுக்கு
முக்கிய‌ம்
ப‌த்தி   பிரித்த‌ல்
அது அவ‌சிய‌மில்லை இங்கு

ஆனால்
பிரித்த‌ல் எளிது
இங்கு வ‌ரி
மிக முக்கிய‌ம் 
எனினும் அது

நாமாக‌
பிரித்தால் வ‌ரி
அது ஒருவேளை

க‌விதையை
கெடுக்க‌லாம், என‌வே
விட்டுவிட‌ வேண்டும்.
நாம் அதை க‌ட‌வுளிட‌ம்
***************************
வழக்கம்போல் முதலில் ஒரு பொருள் (subject) தேர்ந்தெடுக்கனும் !  அதைப் பற்றி ஒரு 6 வரிகள் வருமாறு கட்டுரை எழுதவேண்டும். கட்டுரையான்னு கேக்கக்கூடாது. ஆரம்ப காலத்தில், முடிந்த‌ வ‌ரை சிறிய‌ வாக்கிய‌ங்க‌ளை கொண்டு எழுதுவ‌து ந‌ல்ல‌து.  அதுவும் யாரிட‌மாவ‌து பேசும் தொனியில் இருத்தல் நல‌ம். 

க‌ட்டுரைக‌ளுக்கு ப‌த்தி பிரித்த‌ல் முக்கிய‌ம்.  ஆனால் இங்கு அது அவ‌சிய‌மில்லை.  இங்கு வ‌ரி பிரித்த‌ல் எளிது, எனினும் அது மிக முக்கிய‌ம்.   நாமாக‌ வ‌ரி பிரித்தால் அது ஒருவேளை க‌விதையை கெடுக்க‌லாம், என‌வே நாம் அதை க‌ட‌வுளிட‌ம் விட்டுவிட‌ வேண்டும்.

(க‌ட‌வுளை நம்பாத‌வ‌ர்க‌ள் இய‌ற்கையிட‌ம் விடுங்க‌ள்.) க‌ட‌வுளிட‌ம் விடுவ‌து என்றால், நீங்க‌ள் செய்ய‌வேண்டிய‌து இதுதான்.

க‌ணினியில் எழுதிய‌வ‌ர்க‌ள் இங்கு ப‌டிக்க‌வும்

முதலில் cursor  கட்டுரையின் முதல் வார்த்தைக்கு அடுத்து நிறுத்துங்கள், ஒரு enter அடிக்கவும். பின் கண்ணை மூடிக்கொண்டு cursor  மேலும், கீழும், இடம், வலம் என இஷ்டத்திற்கு move  செய்து தோணும் இடத்தில் எல்லாம் enter அடிக்கவும்.   Enter அடித்தது போதும் என தோன்றிய பிறகு கண்ணை திறக்கவும். எதேனும் ஒரு வரியில் மூன்று வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் அதை மீண்டும் உடைக்கவும். மொத்தம் எத்தனை வரிகள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

தாளில் எழுதுப‌வ‌ர்க‌ள் இங்கு ப‌டிக்க‌வும்

முதலில் கட்டுரையின் முதல் வார்த்தைக்கு அடுத்து பென்சிலால் / போல கோடிடுங்கள், பின் கண்ணை மூடிக்கொண்டு மேலும், கீழும், இடம், வலம் என இஷ்டத்திற்கு நகர்ந்து தோணும் இடத்தில் எல்லாம் பென்சிலால் / போல கோடிடுங்கள். பென்சிலால் கோடிட்டது போதும் என தோன்றிய பிறகு கண்ணை திறக்கவும். எதேனும் ஒரு வரியில் மூன்று வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் அதை மீண்டும் உடைக்கவும். மொத்தம் எத்தனை வரிகள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

இனிதான் முக்கியமான வேலை இருக்கு.. ஒரு வாக்கியத்தின் துண்டுகளை அவற்றிற்குள் வரிசை மாற்றி போடுங்கள்.  கட்டுரையின் முதல் வாக்கியம், கவிதையில் 4 வரியாய் மாற்றியிருந்தால், 1234 வரிசைக்கு பதிலாக 1324 or 1243 etc என்று வரியின் வரிசை மாற்றுங்கள், அப்போ தான் kick கிடைக்கும். அதே போல் கட்டுரையின் எல்லா வாக்கியங்களுக்கும் செய்யவும்.


நீங்க‌ள் க‌விதை எழுதிமுடித்தாயிற்று !! அவ்ளோதானான்னு கேக்காதிங்க‌.. அவ்ளோதான்..

வசன கவிதை தயார்... நடிகர் விஜய் யெல்லாம் பெரிய Dancer  ன்னு பேர் வாங்கும் போது நீங்க‌ள் பெரிய‌ க‌விஞர்ன்னு பேர் வாங்க‌ முடியாதா? விடாமல் முயற்சிக்கவும், கவிதை வராவிட்டாலும் பேர் கிடைக்கும்


உதாரண கவிதை மேலே சிகப்பு நிறத்திலிருக்கும் பத்தியிலிருந்து இங்கே சொல்லியபடி உருவாக்கப்பட்டது.
##படித்து ஜீரணம் பண்ணுவது தான் கடினம்

Saturday, January 8, 2011

கவிதை எழுதலாம் வாருங்கள்... பகுதி-அ

நான் ஒரு 1 மாத விரைவு பயிற்சி (fast track course) குடுக்கலாம்ன்னு இருக்கேன்.

(fee details#  are given at the end of this post)   (People who wish to join can post ur details in comment section)

கவிஞன் ஆகணும்ன்னா முதலில் எவ்விதமான கவிதை உங்களுக்கு நல்லா வருதுன்னு தெரிந்து கொள்ள வேண்டும். (என்னது வித விதமான கவிதைகள் இருக்கான்னு கேக்காதீங்க)

உதாரணம்: ஹைக்கூ, மரபு கவிதை, வசன கவிதை etc...

ஹைக்கூ:  இது எழுதுறதும், பிரசுரமாவதும் ரொம்ப ஈசி. ஆன பத்திரிக்கைகள்ள 50 ரூபாய் தான் சன்மானம் கொடுப்பாங்க (5 வார்த்தைக்கு 50 ரூபாய்ன்னா சும்மாவா), அது போதும்ன்னா இத முயற்சி பண்ணலாம்.
தவிர, இதை முதல் படியா நினைச்சீங்ன்னா சீக்கிரம் முன்னேறிடலாம்.

முதல்ல ஒரு பொருள் (subject)  தேர்ந்தெடுக்கனும்.  எப்படி தேர்ந்தெடுக்கனும்ன்னா, எதாவது ஒரு பழைய புத்தகத்தில் வந்த துணுக்கு, சிரிப்பு அல்லது நேத்து ராத்திரி 12' o clock க்கு வந்த மொக்கை குறுசேதி (SMS)தேர்ந்தெடுக்கனும்.   அதை வாணலியில் யிட்டு..sorry  அந்த வரிய விட்டுருங்க.

தேர்ந்தெடுத்த சிரிப்பு அல்லது செய்தியை ஒரே வரியில் 5 வார்த்தைகளுக்குள் அடங்குமாறு முதலில் எழுதவும்.   பின், கடைசி
மூன்று வார்த்தைகள் முதல் வரியில் இருக்குமாறு வரி பிரிக்க வேண்டும். (tax collection  இல்லை line  breaking )

6 வது வார்த்தை இருந்தால் என்ன பண்றதுன்னு கேட்கிறீர்களா?

.... அதை தலைப்பாக்கி விடுங்கள்.


உதாரணம்:

பெண்ணீயவாதி

பெண்விடுதலை மாநாட்டிற்கு சென்றாள்
கணவனின் அனுமதியோடு


அவ்ளோதான்
கவிதை தயார்.. நீங்கள் கவிஞர் ஆயிடீங்க‌

எழுத்தாளர் சுஜாதா உயிரோடு இல்லை எனவே யாரும் இதை ஹைக்கூ என்று சொல்வதை ஆட்சேபிக்க மாட்டார்கள். அப்படி யாராவது இது ஹைக்கூ இல்லைன்னாங்கன்னா. உங்களுக்கு சென்ரியு தெரியுமான்னு கேளுங்க, ஓடிப்போயிருவார், அதுவும் தெரிந்தவர் உங்களிடம் கேள்வியே கேட்கமாட்டார்.

பகுதி-ஆ நாளை வெளியாகும்... அதுவரை காத்திருக்கவும்

உங்கள் கவிதைகளை பின்னுட்ட‌த்தில் சிந்(து/தியு)ங்கள்

பி.கு.:

சும்மா எதுகை மோனையா பேசினாலே கவிதை கவிதைன்னு சொல்லிச் சொல்லியே சும்மா அவனவன் பேசுவ‌தை/எழுதுவ‌தையே கவிதை (கவதை??) ன்னு சொல்லிக்கிற அளவுக்கு கீ...ழே போயிட்டாங்க.

 இவங்க‌ வதை தாங்க முடியலைஙக...   அதனால தான் இந்த‌ வதை  sorry.. பதிவு !

"கவிங்கன்" (கவிஞன்) ஆக‌னும், பிரபலமாகனுங்கற வெறி நிறைய பேருக்கு பிடிச்சி ஆட்டொ ஆட்டுன்னு ஆடுட்டுது.

அவிங்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

 #Fee: 10 sacs of onion and 10 sacs of garlic.

Saturday, January 1, 2011

அன்ன‌தான‌ச் சாப்பாடின் விலை Rs. 199

இது புத்தாண்டின் முந்த‌ய‌ இர‌வில் ந‌டைபெற்ற‌ நிக‌ழ்ச்சி.

ம‌டிப்பாக்க‌ம் ப‌சார் சாலையில் ஒரு உண‌வ‌க‌ம் உள்ள‌து.  முன்பு அங்கு வேறு உண‌வ‌க‌ம் இருந்த‌து. அங்கு உண‌வும் ந‌ன்றாக‌ இருந்த‌து.  இங்கு உண‌வ‌ருந்த‌ என் ந‌ண்ப‌ரும், அவ‌ரின் ம‌னைவியும் அழைத்தனர்.

வேளச்சேரி ஆர்த்தி பவன் எங்களுடைய விருப்பமாயிருந்தது. இருந்தாலும் நானும் என் மனை‌வியும் வ‌ர‌ ஒப்புக்கொண்டு ம‌டிப்பாக்க‌ம் சென்றோம்.

எங்க‌ளுக்கு முன்பே அங்கு வ‌ந்து விட்ட‌ ந‌ண்ப‌ர், இன்று இங்கு பஃபே இலவசம் என்று சொன்னார்.  நாங்கள் அப்போது ஆர்த்தி பவன் அருகில் வந்திருந்தோம். என் மனைவி அன்னதானமெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்றார்.

நல்ல பார்த்தியான்னு நான் கேட்டேன்.

நல்லாப் பார்த்தேன்னு  சொன்னான். 

சரி அப்போ அ. ஆனந்தபவன் போலாம்ன்னு சொன்னேன்.

அவன் டேய் அங்க பஃபே வழக்கமா ரூ. 99 தான் ஆனால் இன்று 175 ரூபாய் டா என்றான்.

சரி நாம் (வழக்கமான முறையில்) வேண்டியதை ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்றேன்.

நாம் ஏன் இங்கு அதை செய்யக்கூடாது என்றான். 

என் மனைவி மனதில் மணி அடித்தது போலும், அவரை இங்க வரச்சொல்லுங்க இல்ல நாம மட்டும் இங்கே சாப்பிடலாம்ன்னு சொன்னாள். 

மனைவி சொல் மிக்க மந்திரமில்லை அல்லவா ‍(எதாவது சரியில்லாமல் போய்விட்டால் பாட்டு வாங்றது யாரு) ஆகவே அவள் சொன்னபடி அவனிடம் சொல்லிவிட்டேன். 

அவன் அங்கு சாப்பிட முடிவுபண்ணினான்.

அப்போது ப‌ள்ளிக்க‌ர‌ணையில் உள்ள‌ ஒரு ந‌ண்ப‌ர் பேசினார், அவ‌ர் அவ‌ரின் வீட்டிற்கு சாப்பிட‌ அழைத்தார். உண‌வ‌க‌த்தில் சாப்பிட‌ அழைத்து வ‌ந்து விட்டு வீட்டில் சாப்பிட்டால் என் மனைவி அடிப்பாள் என்றேன். அவரின் மனைவி என் மனைவியிடம் தொலைபேசியில் பேசி எங்களை வீட்டிற்க்கு வரவைத்து விட்டார்.

சாப்பிட்டு, பேசிவிட்டு நாங்கள் 11 மணிவாக்கில் வீடு திரும்பினோம்.  சுமார் 11:50 க்கு முதல் நண்பர் அழைத்தார். நாங்கள் சாப்பிட்டதைப் பற்றி கேட்டார், சொன்னேன்.

அவர் சாப்பிட்ட கதை கேட்ட போது தலைவர் காமெடி பீஸ் ஆனது தெரிய வந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறந்திருப்பதால், புத்தகங்களோடு சாம்பு சாசே தருவது போல ஃப்ரீ பஃபெ என நினைத்து உள்ளே சென்றுள்ளன‌ர். நன்றாக சாப்பிட்ருக்கிறார்கள்.

சாப்பிட்டு முடிக்கும் வேளையில் பில் தலைக்கு ரூ. 199 என்று சொல்லவும். நண்பரின் மனைவி செம டென்ஷன் ஆகியிருக்கிறார்.

நண்பர், ஃப்ரீன்னு போட்றுகியளே (தேவர் மகன் ரேவதியின் "மறந்திருவேன்னியளே" போல) என்று கேட்கவும், அவர்கள், 2 க்கு 1 ஃப்ரீன்னு சொல்லிருக்கார். இவர் இருவராய் இருந்ததால் ஃப்ரீ இல்லை,  பணம் கொடுத்துட்டு வந்திருக்கார்.

அங்கிருந்து கிள‌ம்பிய‌திலிருந்து அவ‌ரின் ம‌னைவி, செம அர்ச்ச‌னை செய்துள்ளார். உண‌வக‌த்துக்கார‌ருக்கு, என் ந‌ண்ப‌ருக்கும் கோடிய‌ர்ச்சனை என்று அவர் சொன்னபோது நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.  அவர் ரொம்ப‌ சிரிக்காதெ உங்க‌ளிருவ‌ருக்கும் ல‌ட்சார்ச்ச‌னை என்றார்.  நாங்க‌ என்ன‌ய்யா செய்தோம்ன்னு கேட்டால், நான்கு பேரில் ஒருவ‌ருக்கு ஃப்ரீ கிடைத்திருக்குமே.  முழு ஃப்ரீ எதிர்பார்த்ததிற்கு மூன்றிலொன்றாவது கிடைத்தது என்று மகிழ்ந்திருப்பாள். 

நல்லா இருக்கே கதை? இவங்க‌ ம‌ட்டும் ஏமாந்த‌து தான் உண்மையான‌ வ‌ருத்தாமா இருக்குமென்கிறாள் என் ம‌னைவி.

ஆக‌ மொத்த‌ம் வெறுமே ஃப்ரீன்னு போட்ட‌து அவ‌ங்க‌ த‌ப்பு, அன்ன‌தான‌த்துக்கு(?) ஆசைப் ப‌டாவிட்டாலும் ஃப்ரீ எதிர்பார்த்த‌து இவ‌ரின் தவ‌று..

நீங்கள் என்ன‌ சொல்கிறீர்க‌ள்?