Pages

Friday, December 31, 2010

திருட்டு என்றால் என்ன‌

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

என் மதிப்பிற்குரிய ஐய்யா சுப்பையா அவர்கள், வலைப்பூவில் ஜோதிடம் சொல்லித்தருகிறார்.  அதை எவனோ சுட்டு விட்டான்.

யார் பெத்த பிள்ளையய்யோ நான் பெத்த பிள்ளை என்று சொல்வது எவ்வளவு _____ தோ அவ்வளவு ___ மானது இம்மாதிரியான செயல்கள்.

தற்செயலாய் http://sirippupolice.blogspot.com/ யில் http://www.myfreecopyright.com/ பற்றி அறிந்தேன்.  என் வலைப்பூவிற்கும் (இனிமேல்தான் உருப்படியா எதாவது எழுதவேண்டுமென்றாலும் கூட‌) காவல் போட்டுள்ளேன். சுப்பையா ஐய்யாவிற்கும் அதை (காவல்)  பரிந்துரைக்கிறேன்.

என் ப‌ள்ளிக்கால‌த்தில், ஒரு முழுப்பரிட்சை விடுமுறையில் என் தந்தை எங்கள் புத்தக அலமாரியை சுத்தப் படுத்த என்னை அழைத்தார்.  அது ஒரு ஆளுயரத்தை விட பெரிய மர அலமாரி, மிகவும் அகலமானதும் கூட.  அதில் எத்தனை புத்தகம் உள்ளது என்று தெரியவில்லை, குறைந்தது 2000 புத்தகங்கள் இருக்கும். அவைகள் புத்தககடைகளில் பள்ளி நோட்களை  எப்படி அடுக்கி இருப்பார்களோ அப்படிதான் அடுக்கி இருக்கும். (அதாவது நூலகமுறையில் அல்ல).  அதைத் திறந்தால் பழம்புத்தகத்தின் வாசம் (நெடி?) வரும்.

அதில் பல புத்தகங்களின் தலைப்பில் "திரட்டு" என்ற வார்த்தை இருந்தது. திரட்டு என்றால் என்ன என்று அப்பாவிடம் கேட்டேன்.  "ஒரு புத்தகத்தில் இருந்து திருடினால் திருட்டு,  பல புத்தகங்களில் இருந்து திருடினால் திரட்டு" என்று வேடிக்கையாக அவர் சொன்னார். 

இது அதன் பின்னர் பலர் எனக்கு நியாபகப்படுத்துகின்றனர்.  சமீபத்தில் திரு. மிஷ்கினின் நந்தலாலா (இது பற்றி தனி பதிவிட ஆசை.. பார்க்கலாம்).  

திருட்டை, திருட்டுப் படைப்புகளை "சுட்ட பழம்" என அழைக்கலாம் என நினைக்கிறேன்.

திரட்டுக்கள் இருவகைப் படும், 1. சேகரிப்பு, அல்லது தொகுப்பு 2. முன்பே சொன்னது போல பல படைப்புகளில் இருந்து திருடிவை. இவற்றை "திற்றட்டு" என்று அழைக்கலாம் என நினைக்கிறேன்.  உங்கள் எண்ணத்தைச் சொல்லுங்கள்.

சராசரி மனிதனுக்கு பிடித்த வலைப்பூக்கள்

சில வலைப்பூக்கள் நான் அடிக்கடி பார்ப்பதுண்டு அதாவது "தொடர்வதில்லை" ஆனால் தேடுதளத்திலோ, தமிழ்மணத்திலோ தேடி தேடி தான் ஒவ்வொரு முறையும் செல்வது வழக்கம்.  இது தலையைச் சுத்தி மூக்கை தொடும் வேலைதான் ஆனால் அப்படித்தான் போகிறேன்.  இனி அவைகளை "தொடர" இருக்கிறேன். சம்மந்தப் பட்டவர்கள் ஜாக்கிரதையாக(?) இருக்கவும் !

நான் மதிக்கும் இருவரின் வலைப்பூக்கள்:
http://classroom2007.blogspot.com/
http://parppu.blogspot.com/
இரண்டும் ஜோதிடம் பற்றியதுதான், ஒருவர் விவசாயம் சொல்லித்தருகிறார், மற்றவர் சாப்பாடு போடுகிறார்.
இரண்டும் முற்றிலும் இலவசம்.

அடுத்த இரு வலைப்பூக்கள்
http://charuonline.com/
http://venkatarangan.com/
சாரு வின் புத்தகங்கள் படித்ததில்லை, வலையில் கிடைத்த விமர்சனங்கள் அவரை படிக்கத் தூண்டுகின்றன. விரைவில்..

இவரின் (வருண்) பார்வை என் பார்வை போல இருக்கிறது, ஆனால் ஆங்காங்கே சறுக்குகிறார்.
http://timeforsomelove.blogspot.com/

இன்னும் சிலவற்றைத் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைத்தவுடன் அவர்களையும் "தொடர" இருக்கிறேன்.

பல நண்பர்கள், வலை விலாசம் வேறாகவும், வலைப்பூவின் பெயர் வேறாகவும் வைத்திருப்பதால் என் தேடுதல் இன்னும் தாமதப் படுகிறது.