Pages

Wednesday, June 22, 2011

லோக்பாலும் 40 திருட‌ர்க‌ளும்

இப்போ சில மாதங்களாக லோக்பால் என்ற வார்த்தைதான் செய்தி ஊடகங்களில் "அடி" பட்டுக்கொண்டிருக்கும் வார்த்தை.  இந்த கூச்சல்களுக்குப் பின்னால் இருப்பது என்னன்னு அறிய யாருக்கும் நேரமில்லை?!!

இது கருப்பு பணத்தை ஒழிக்க அன்னா ஹாசாரெ கொண்டு வந்துள்ள திட்டம் என்று ஒருவர் சொன்னார், மற்றொருவர், இது ராம்தேவ், அன்னா ஹாசாரெ இருவரும் வெளி நாட்டிலிருந்து நமது கருப்பு பணத்தை கொண்டு வரும் திட்டம் என்றார்.  I cannot blame them.

If u want to know it, Visit  http://en.wikipedia.org/wiki/Jan_Lokpal_Bill

Anyway! நான் சொல்ல வருவது 2 விசயங்கள். 1.  இது நடைமுறை சாத்தியமா? 2.  இது நடக்குமா?  இரண்டும் ஒன்று போல் தெரிந்தாலும் ஒன்றல்ல.

அன்னா ஹாசாரெ கேட்கும் லொக்பால் ஒரு வரியில் சொன்னால், எல்லா ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, தனியே ஒரு அமைப்பு.

நல்ல விசயம் தானெ என்கிறீர்களா?

ஆம் நல்ல விசயம் தான் ! ஆனால், இந்த அமைப்புக்கென்று தனியெ ஒரு காவல் படை உள்பட‌ இந்தியாவில் குற்றப் புலனாய்வில் எந்த எந்த துறைகள் உண்டோ அத்தனையும்  லொக்பால் கீழ் தனியே அமைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.  இது கிட்டத்தட்ட இன்னொரு "இணை அரசாங்கம்" "Parallel Govt" அமைப்பது போல.  இது நடைமுறைச் சாத்தியம் அல்ல!.

இது 1969 லிருந்து இன்று வரை ராஜ்ய சபா, லோக் சபா, சமூக ஆர்வலர்கள் என பந்தாடப் பட்டு வருகிறது. 

அப்றம் ஏன் அரசு இதில் இவ்வளவு அக்கறையோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது?

இந்த‌ அர‌சாங்க‌ம், ஊட‌க‌ங்க‌ளுக்கும், ம‌க்க‌ளுக்கும், ஒரு நாட‌க‌மாய் இதை ந‌ட‌த்தி வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிற‌து.

விலைவாசி, காஷ்மீர், 2G இன்ன‌பிற‌ பிர‌ச்ச‌னைகள் நாம் மற‌க்க‌வேண்டாமா?

இது, பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை, காவிரி பேச்சுவார்த்தை, ம‌க‌ளீர் ம‌சோதா, போல மற்றொரு நாட‌கம் அவ்வ‌ள‌வுதான்!

எங்கோ ஒரு இடத்தில் பெரிய ரயில் விபத்தோ, குண்டு வெடிப்போ நடக்கும் வரை உ இந்த நாட‌கம் ஊடகங்களில் முன்னிருக்கும், அது வரை enjoy!