Pages

Monday, November 7, 2011

கூடன்குளம் அணு உலை ஏன் வேண்டாம்?

எல்லா பிரச்சனைகளையும் போல இதற்கும் நாம், உண்மை என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் இரு தரப்பாக பிரிந்து கிடக்கிறோம்.  டீ கடைமுதல் முகநூல்(facebook) வரை இது நடைபெறுகிறது.  Media வில் உலவ விடப்படும் செய்திகளில், நம் காதில் விழும் செய்தியை
அடிப்படையாய் கொண்டு, நாம் ஒரு நிலையை எடுத்துக்கொள்கிறோம்;
பின் எதிர் நிலை எடுத்தவர் தவறு என்று வாதம் செய்கிறோம். நாமும் சரி அவரும் சரி எதிர் கருத்து என்ன, அதில் உண்மை எவ்வளவு நம் கருத்து எவ்வளவு சரி என்று நாம் ஆராய்ச்சி செய்வதில்லை, அதற்கான நேரமும் இல்லை,


ஒரு கருத்தை பல முலாம் பூசி வெளியிடுவதில் நாம் சமர்த்தர்கள். இதிலும், இது போன்ற விஞ்ஞானம் சம்பத்தப்பட்ட விசயங்களை கற்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

அணு உலை வேண்டும் என்பவர்களின் வாதம் மூன்று முக்கிய புள்ளிகளின் மேல் அமைந்துள்ளது. அது,
1. நிகழ்கால மின்சாரத் தேவைகளுக்கும், பல மடங்கு உயர இருக்கிற எதிர்கால தேவைகளுக்கும் இந்த உலை அவசியம்.
2. இந்த உலையால் மக்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாத விதமாக‌ எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.
3. இயற்கை பேரிடர்களால் பாதிக்காது
4. பல கோடி ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது.

உலை வேண்டாம் என்பவர்களின் வாதம் அல்லது பதில் என்ன‌?

1.  மின்சாரம் தாயாரிக்க இதுதான் ஒரே வழியா அல்லது சிறந்த வழியா?
2 & 3 இத்தொழில்நுட்பத்தில் இந்தியாவை விட அதிக அனுபவம் பெற்ற நாடுகள் கூட தோல்வியை தான் தழுவியுள்ளது.


பலகோடி செலவில் தயாரிக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்படும் செயற்கைகோள்க‌ள் சில தோல்வியடைந்து கடலில் வீழ்ந்தன.  அவைகள் தோல்வியடைந்ததற்கு விஞ்ஞானிகளின் ஏதோ ஒரு தவறு அல்லது கவனகுறைவுதான் காரணமென்பதை அவர்களே
ஒத்துக்கொள்வார்கள்.  அந்த "மனிதத் தவறு" சில நூறு கோடிகளை ரூபாய்களை மட்டும் தான் கடலில் கொட்டுகிறது, இந்த உலை பல‌  நூறு மக்களின் உயிருக்கு உலை வைத்துவிடும்.

கவனக்குறைவாய் ஓட்டி பயணிகளின் உயிர்போக காரணமாய் இருக்கும் ஒட்டுனர்களை சபிக்கிற நாம், அந்த விஞ்ஞானிகளை சபிப்பத்தில்லை ஏனென்றால் முன்னது உயிர் சம்மந்தப்பட்டது, பின்னது வெறும் பணம் சம்மந்தப்பட்டது. 

சரி பாதுகாப்பானது என்றே வைத்துக்கொள்வோம்.

புகைவண்டி, பேருந்து போன்றவற்றில் நீங்கள் எளிதில் தீப்பிடிக்கத்தக்க பொருள்களை (பெட்ரோல், மண்ணெண்ய், பட்டாசு etc) கொண்டு செல்லக்கூடாது. ஏனென்றால் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கத்தக்கது. அது பயணிகளின் "தலை மேல் தொங்கும் கத்தி"
போன்றது. இந்த விதியை ஒத்ததுதான் கூடன்குளம் மக்கள் கேட்பதும்.  ஒருவேளை அந்த பயணி (எப்போதும் 100% கவனத்தோடு தவறின்றி வேலை பார்க்கும் திறமையுடைய அணு உலை விஞ்ஞானியே ஆனாலும்)  நான் இதை அதிக‌ பட்ச பாதுகாப்போடு தான் கொண்டு வருகிறேன் என்றால் அரசு ஒத்துக்கொள்ளுமா?  அரசின் பதில் பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து விளைவிக்கதக்க
செயலை செய்யாதீர்கள் என்று தான் சொல்லும். அதுதான் கூடன்குளம் மக்கள் கேட்பதும்.  அப்படிபட்ட பொருளை வேறு ஊருக்கு எடுத்தச் செல்ல வேண்டுமானால் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்காத பாதுகாப்பான வேறு தனியார் வாகனத்தில் எடுத்துசெல்லத்தான்
அரசு அறிவுறுத்தும். அதை போல் அரசும் மின்சாரத்தை வேறு வழியில் தயாரிக்கலாமே.

அரசுகள் திட்டமிட்டு மின்சார தட்டுபாட்டை உருவாக்குகிறார்கள், நிலக்கரி கையிருப்பு இல்லை என்கிறார்கள்.  மற்றப்பகுதியில் வாழ்ந்து கொண்டு மின்சாரத்தேவைக்காக இது செய்துதான் ஆகவேண்டும் என்பவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு பங்கம் இல்லை என்பதால்தான் சொல்வதாக நினைக்க வேண்டியிருக்கிறது.

கல்பாக்கம் உள்ளிட்ட  பல உலை உள்ள இடங்களில் மக்கள் வாழத்தானே செய்கிறார்களே என்றால் காஷ்மீரில் கூட மக்கள் வாழ்கிறார்கள் நம் சகோதர இந்தியர்கள், தமிழ்நாட்டையும் அதே நிலைக்கு கொண்டு செல்லலாமா? உயிர் வாழ்வ‌தற்கு உத்திரவாதமுள்ள தமிழ்நாட்டை போல ஆக வேண்டும் என்று காஷ்மீர் நினைக்கவேண்டுமே அன்றி,  நாம் காஷ்மீர் போல் ஆக ஆசை படக்கூடாது

இந்த உலை ராஜிவ் கால‌த்தில் போடப்பட்ட ஒப்பந்ததின் அடிப்படையில் தான் எழுந்துள்ளது, அதன் பிறகு, காலம் மாறிவிட்டது, எல்லோருக்கும் அறிவு வளர்ந்திருக்கிறது.  முக்கியமாக கடந்தகாலங்களில், இந்தியாவில் இது போன்ற பிரச்சனை தரதக்க
தொழிற்சாலைகளால் அப்பகுதி மக்கள் பட்ட/ படும் துன்பங்களை அறிந்தபின், கூடன்குளம் மக்கள் ஆதரித்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.  அவர்களும், மணலியிலும், தூத்துக்குடியிலும், இன்னும் பிற இடங்களின் மக்கள் படும் அவஸ்தைகளையும் அறிவார்கள்.
போபால் முதல் ஃபுகுசிமா வரை வரலாறும் அவர்களுக்கும் தெரியும்தானே.

இன்று Mr. கலாம் அறிவித்துள்ள 10 அம்ச திட்டம், மக்களை இலவசம் தந்து ஓட்டு கேட்கும் அரசியல்வியாதிகளின் நீட்சியாகத்தான் கருத வேண்டி இருக்கிறது


You Too Kalaam sir?

1 comment:

  1. எந்த அணு உலை வெடித்தால் எத்தனை பேர் செத்து போவாங்க? 10 ஆயிரம்? 20 ஆயிரம்? அட ஒரு 50 ஆயிரம்? ஆனால் வருடத்தில் சுமார் 1 லட்சம் பேர் நம் நாட்டில் சாலை விபத்துக்களில் செத்துப் போறாங்களே? அது மட்டும் ஏன் கண்ணுக்கு தெரியல? 1980 to 1990 தமிழ்நாட்டில் சிசுக்கொலைகள் ஏராளம். அதனுடைய பலன் இன்று பெண்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது.சிசுக்கொலை பண்ணவங்கல்லாம் போய்ட்டானுங்க.இப்போ கஷ்டபடுறது யாரு? நீர்,நிலம்,காற்று,ஆகாயம்,அக்னி எல்லாவற்றையும் மாசுபடுதியாச்சு.முதலில் பெய்யும் மழை நீரில் நனைய வேண்டாம் என்று சொல்வது வானில்,காற்றில் கலந்துள்ள அமிலக் கழிவுகலால் தான். இப்படி எல்லவாற்றையும் நாசம் செய்தாச்சு.அடுத்த தலைமுறைக்கு எதையும் மிச்சம் வைக்க வில்லை. இவ்வளவும் பண்ணிய நம்மை விடவா இந்த அணு உலை மோசம் செய்துவிடும்? சில நேரங்களில் பாசிடிவ் ஆக நினைத்தால் தான் செய்யமுடியும். எதிர்மறை எண்ணங்களால் ஒன்றுமே சாதிக்க முடியாது. தயவு செய்து கலாமை அரசியல்வாதிகளோடு சேர்க்காதிர்கள். அவருக்கு விஞ்ஞானம் தெரிந்த அளவுக்கு அரசியல் தெரிய வில்லை.

    ReplyDelete