Pages

Thursday, July 28, 2011

எடியூரப்பா - நீஙக நல்லவரா? கெட்டவரா?

காங்கிரஸ் கட்சி முன்னெப்போதையும் விட இப்போது எதிரிகளை எளிதாக அழித்தொழிக்கிறது.  ஒருவேளை மஹாராஷ்ட்ராவில் தன் முதல்வரையே மாற்றியதே என்று யோசிக்கத் தோன்றலாம். தன் கட்சியிலேயே அவர்கள் சில பலிகளை கொடுப்பது த‌ங்களை தூய்மையானவர்கள் என்று காண்பிக்கத்தானோ என்றுதான் தோன்றுகிறது. (இந்த உலகம் இன்னுமா நம்மளை நம்புது?)

எடியூரப்பா எத்த‌னை முறை பாத்ரூம் உள்ளே போயி க‌த்தி க‌தறி அழுது கொண்டாரோ? பாவ‌ம் ம‌னித‌னுக்கு இப்பொ பிடித்த‌ த‌மிழ் பாட‌ல் "சோத‌னை மேல் சோத‌னை.. போதும‌டா சாமி.." யாக‌த்தான் இருக்கும்.  முத‌ல்வ‌ர் வேலை பார்க்க‌ அவ‌ருக்கு எப்ப‌டி நேர‌ம் கிடைக்கிற‌து என்ப‌து க‌ட‌வுளுக்குத் தான் வெளிச்ச‌ம்!

ப‌வுன்ச‌ர் மேல் ப‌வுன்ச‌ர் போட்டுகிட்டே இருக்காங்க‌, இப்போ third umpire கிட்ட‌ வேற‌ விச‌ய‌ம் போயிருக்கு. பார்க்க‌லாம் என்ன‌ ந‌ட‌க்கிற‌தென்று.

சுர‌ங்க‌ ஊழ‌லில், தோண்ட‌த் தோண்ட‌ ஏக‌ப்ப‌ட்ட‌ த‌லைக‌ள் கிடைத்துள்ள‌ன‌. எல்லாம் ச‌ரி, இந்த‌ லோக‌யுக்தா அறிக்கை ச‌ம‌ர்ப்பிக்கும் முன்பே media வில் அது கிடைக்கிற‌தே அது எப்ப‌டி? 

இந்த‌ நாட்டில் "அரச‌ ர‌க‌சிய‌ம்" என்று ஒன்றே கிடையாதா?   நாடுக‌ள், அடுத்த‌ நாடுகளின் ராணுவ‌, ம‌ற்றும் இத‌ர‌ அர‌ச‌ ர‌க‌சிய‌ங்க‌ளை அறிய‌ ஒற்ற‌ர் ப‌டை ஒன்று அனுப்பியிருப்பார்க‌ள்.  ஆனால் இந்தியாவுக்கு அது அவ‌ர்க‌ளுக்கு தேவை இல்லை?   இங்கே media கார‌ர்க‌ள் எளிதாக‌ அதை செய்யும்போது, ஒற்ற‌ர் ப‌டை எத‌ற்கு?

 லோக‌யுக்தா தலைவ‌ரிட‌ம் ஒரு நிருப‌ர் கேட்கிறார், இத்த‌னை chapter, இத்த‌னை ப‌க்க‌ம் கொண்ட‌ இந்த‌ அறிக்கையை எப்போது அர‌சிட‌ம் ச‌ம‌ர்ப்பிக்க‌ போகிறீர்க‌ள்?  அத‌ற்கு அவ‌ர், "நான் கையெழுத்திட்டு இன்று ஒப்ப‌டைப்பேன்" என்கிறார்.  நாம் இன்னும் கையெழுத்திடாத‌ ஒரு அறிக்கையின் முழு ப‌ரிமாண‌மும் ஏற்க‌ன‌வே எல்லோரும் அறிந்த‌ ர‌க‌சிய‌ம் என்ப‌தில் அவ‌ருக்கு துளியும் வ‌ருத்த‌மில்லை போலும்.  ஒருவேளை கையெழுத்திட்ட ‌அறிக்கை leakஆனால் இன்னும் கேவ‌ல‌ம் என்றுதான் கையெழுத்திடாதிருந்தாரோ?  அவ‌ருக்கே வெளிச்ச‌ம்.

எல்லாம் ச‌ரி குற்ற‌ச்சாட்டு நிருபிக்க‌ப்ப‌ட்டால் அர‌சிய‌லை விட்டு வில‌குவ‌தாக‌ எடியூரப்பா சொன்னார்.  

எடியூரப்பா அவர்களே!  இப்போ அறிக்கையில் உம்முடைய‌ பாட்டும் குற்ற‌முடைய‌துன்னு சொல்லிருக்கிற‌தே,  நீர் நல்லவரா? கெட்டவரா?

Thursday, July 21, 2011

சமசீர் கல்விக்கு வெற்றி !

சமசீர் கல்வியில் என்ன தவறுன்னு இவங்களும் சொல்ல மாட்டேன்றங்க, நீதி மன்றத் தீர்ப்பிர்க்கு பிறகும் நமக்கு சொல்லப்படவில்லை.

ந‌ம‌க்கு தெரிந்த‌தெல்லாம், ஐய்யாவின் க‌விதை இட‌ம் பெற்றுள்ள‌‌துன்ற‌துதான்!

ஐய்யா கவிதையையே யாரும் கவிதைனு ஒத்துக்கொள்வதில்லை ( doubt இருந்தா MSVயிடம் கேட்கவும்), இதில, சொக்காரங்க எழுதின கவிதையெல்லாம், புதிய கல்வித் திட்டத்தில் சேர்த்திருக்காரு, அப்றம், அதை வேணா உட்ருங்கன்னு ரொம்ப பெருந்தன்மையான்வரை போல பேசுனாரு. இப்போ வெற்றி தோல்வி யாருக்கும் இல்லைன்னு அடுத்த நாடகம்.

"எங்க தலைவரை எதிர்த்து அரசியல் பண்ண ஒருத்தன் இன்னும் பொறக்கல" னு என் "பிற்ண்டு" (friend) பிறாண்டியது, மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Becuase, இது கலைஞரின் கவிதைக்கோ, புதிய பாடத்திட்டத்தின் syllabusகோ, அதன் குழுவிற்கோ கிடைத்த வெற்றியில்லை.

இது "சம சீர் கல்வி" என்ற பெயருக்கு கிடைத்த வெற்றி !

சம சீர் கல்வி ஐய்யா கொண்டு வந்ததுன்றதுக்காக அம்மா எதிர்ப்பது(அப்படி மக்கள் நினைக்கும்படிதானே  அம்மா செயல்படுகிறார்) எவ்ளோ தவறோ, அவ்ளோ தவறு, அம்மாவின் (எதிர்ப்பு) குழு அதை சரியா செய்யல, இதை சரியா செய்யலன்னு சொல்லி, சம சீர் கல்வி எல்லா வகுப்புக்கும் இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப் படுத்த முயற்சி செய்வது.

ப‌டிப்ப‌டியாக‌ நடைமுறைப் படுத்துவ்தே ச‌ரி.

சரியான விசயமாக இருந்தாலும் சரியான முறையில் செய்ய வேண்டும்.

Sunday, July 17, 2011

அம்மாவின் "துக்ளக் தர்பார்" !

அம்மா எப்படி என்பது எல்லொருக்கும் தெரிந்த விசயம்.  அவருக்கே தெரியாத விசயம் அவரால் கட்டுப்படுத்த முடியாதபடி செயல்படும் அதிகார மையத்தை தவிர்ப்பதெப்படி என்பது தான்.

"அதிகார மையம்" யார் என கேட்கும் அப்பாவிகள் மன்னார்குடி போய் 1/4 கிலொ மல்லாட்டை சாப்பிட்டு வாருங்கள்!

அம்மா வெற்றி பெற்றது அவரின் திறமையோ, புத்திசாலித்தனமோ, கூட்டணியோ (மட்டும்?!) காரணமல்ல என அவருக்கும், அனைவருக்கும் தெரிந்த உண்மை.  மக்கள் கருணா மீதான கோபத்தில் ஆட்சி மாற்றம் தேவை என கொடுத்த வாய்ப்புதான் இது.

ஆரம்பத்திலேயே இதை உணர்ந்துதான் பேசி, செயல்பட்டு வந்தார் ஜெ. என்றாலும் தற்போது காணக் கிடைக்கும் காட்சிகள், விரைவிலேயே ஜெ மக்களில் அதிருப்தியை சம்பாதித்து விடுவார் என தோன்றுகிறது.

ஜெ எப்போதும் மக்களுக்குத் தேவையான, சரியான திட்டங்கள் தீட்டி, தீவிரமாய் நடைமுறைப் படுத்துவார் என பெயர் பெற்றவர்.  இம்முறை, அவர், நீண்டகால திட்டங்கள், தொலை நோக்கு பார்வை தேவைப்படுகிற திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது தவறல்ல, மின்சார பற்றாக்குறையை போக்க எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி, அவை பலனளிக்க ஆரம்பிக்கும் வரை மக்கள், அறியவோ, பாரட்டவோ போவதில்லை, மாறாக சட்டம் ஒழுங்கு போன்ற தினசரி பிரச்சனைகளில் மக்கள், ஆட்சி மாற்றத்தை உணரும் விதமாக நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே ஜெ பாமர மக்களின் நன்மதிப்பை பெறமுடியும்.

ஓர் அர‌சின் நடவடிக்கைகளின் விளைவை ம‌க்க‌ள் உணரும் விதமாக அரசு அறிவிப்புகள் வெளியிட‌ ‌வேண்டும்.  க‌ருணாவிற்கு "PR skills" கைவ‌ந்த‌ க‌லை, ஜெ க்கு இத்த‌னை ஆண்டு அனுப‌வ‌த்திற்குப் பிற‌கும் கை வ‌ராத‌ க‌லை இது.

ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்வதற்கும், அரசு நிர்வாகத்திற்குமான வித்தியாசத்தை ஜெ உணர்ந்ததாகத் தெரியவில்லை.

படித்த மக்களிடம் கூட ஜெ அர‌சு இருந்த ந‌ல்ல‌ பெயரையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.  IAS, IPS அதிகாரிகள் தினமும் காலையில் ஜெயா டீவி பார்த்துதான் தாங்கள் எந்த பணியில், எந்த ஊரில் இன்று பணியாற்ற வேண்டும் என்பது அரசைப் பார்த்து, அதிகாரிகளைப் பார்த்து, மக்கள் நகைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது 

மந்திரிகள் பாடு அதை விட மோசம்!

துக்ளக் "சோ" தான் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டதாக பலர் பெருமை பேசிக்கொள்கின்றன்ர்.  அது ஜெ அரசுக்கு அவமானமில்லை ஆனால் இது "துக்ளக் அரசு/தர்பார்" என்று சொல்ல நேர்ந்தால் அது அவமானம்; உடனே ஜெ உஷாராகவில்லையென்றால் "இது துக்ளக் தர்பார்" என்று முதலில் துக்ளக் "சோ"  சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

Saturday, July 16, 2011

கருணாவின் கண்ணி வெடிகள்!

எச்சரிக்கை: இது ஈழ கருணாவைப் பற்றியதல்ல‌ !

திமுக, 2011 தேர்தலில் ஆட்சியை பிடிக்காது என்று முதலில் அறிந்தவர், திரு. கருணாநிதி தான் என்று நினைக்கிறேன். ஆகவே அவர் நிறைய கண்ணி வெடிகளை புதைத்து விட்டு வந்துள்ளார்.

அடுத்து வரும் முதல்வர் கால் (கை) வைக்கும் இடமெல்லாம் பிரச்சனை வெடிக்க வேண்டும், எவ்விதம் முடிவெடுத்து செயல்பட்டாலும் அது பிரச்சனை கிளப்பவேண்டும் என்று திட்டமிட்டு செயல் பட்டது போல் தெரிகிறது.

இதை படித்த உடனே அவரின் ராஜதந்திரம் என போற்ற நிறைய பேர் கிளம்பி விடுவார்கள். இந்த மாதிரி முட்டாள் தனமான புகழ்பாடி களால் தான் தமிழ் நாட்டில் தினமும் ஒரு "வருங்கால முதல்வர்" உருவாகிறார்.

முதல் வெடி:
புதிய‌ க‌ட்டிட‌த்தில், ச‌ட்ட‌ச‌பை செய‌ல் ப‌ட‌ வேண்டுமானால் க‌ட்டிட‌ ப‌ணி முடிய‌ வேண்டும். க‌ட்டிட‌ ப‌ணி முடிய‌ வேண்டுமானால் கோடிக் க‌ண‌க்கில் செல‌வு செய்ய‌ வேண்டும். தேவையான செலவுகளுக்கே நிதி இல்லாத போது, கட்டிட பணி செய்ய நிதி ஒதுக்க முடியாது. என்வே பழைய கட்டிடத்தில் செயல் பட புது முதல்வர் முடிவு செய்வார், அங்கே எப்படி ஆப்பு வைப்பது என்று யொசித்து அங்கே "செம்மொழி நூல‌க‌ம்" அமைத்தார். இதை வேறு இட‌த்திற்கு மாற்றாம‌ல், இங்கு ச‌ட்ட‌ச‌பை செய‌ல் ப‌ட‌ இய‌லாது, இதை மாற்றினால் பார்பனர், தமிழுக்கு எதிரானவர்ன்னு பிரச்சனை எதையாவது கிளப்பி விடலாம் என்று செம ப்ளான்.

ஆனால் ஜெ, அதை வெற்றிகரமாக சமாளித்துள்ளார்.

அடுத்தது, பள்ளிக் கட்டணம். அதை விட பெரிய வெடி, சமச்சீர் கல்வி.

பேரை கேட்டாலே சும்ம‌ அதிரும்ல‌ன்னு வைத்த‌ வெடி இது. ச‌மச்சீர் க‌ல்வி, 1, 6 வ‌குப்புக் க‌ளுக்கு ஏற்கன‌வெ அறிமுக‌ப் படுத்தியாச்சி அவ‌ர் ஆட்சியிலேயே!. அது ஏன் 1, 6 மட்டும்? புதிய‌ பாட‌த்திட்ட‌ம் அறிமுக‌மாக்கும் பொழுது கடைப்பிடிக்க‌ப் ப‌டும் ம‌ர‌பு. 1, 6 வ‌குப்பு மாண‌வ‌ன் அடுத்த‌ க‌ல்வியாண்டுக்கு வரும்போது அவ‌னுக்கு புது பாட‌த்திட்ட‌ம் கிடைக்கும், அதாவ‌து 2,7 க்கும் புதிய‌ பாட‌த்திட்ட‌ம் அறிமுக‌மாகும். அது அவ்வாறே தொடர்ந்து, 3,8; 4,9; 5,10; என தொடரும் க‌ல்வியாண்டுகளில் புதிய‌ பாட‌த்திட்ட‌ம் அறிமுக‌மாகும்.

இவ‌ரு 2,7 ம‌ட்டும‌ல்ல‌ எல்லா வ‌குப்புகளுக்கும் இந்த 2011-12 கல்வியாண்டில் புதிய‌ பாட‌த்திட்ட‌ம் அறிமுக‌ப்படுத்த‌ திட்ட‌மிட்டார். அது ம‌ட்டும‌ல்ல‌, பாட‌த்திட்ட‌ம் அறிமுக‌மானால் புதிய பாடம் (subject) உதாரணமாக பொருளியல் ஆசிரிய‌ர் நிய‌மிக்க‌ வேண்டும். அதில் ப‌ல‌ ந‌டைமுறைச் சிக்கல்களை, பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும். 

இப்போது விசயம் நீதிமன்றத்தில் உள்ளதால், தீர்ப்பை பொருத்து ஜெ செயல்பட்டால் போதும், எது பிரச்சனை என்றாலும் நீதிமன்ற வழிகாட்டலோடு தப்பித்து விடலாம்,

என்ன கண்ணைக் கெட்டுதா?

கருணாவின் கண்ணி வெடிகள் - பாக‌ம் 2 சில‌ நாட்க‌ளுக்கு பின் தொடரும் !