Pages

Thursday, November 3, 2011

7ம் அறிவு படம் ஒரு பாடம்

பலமுறை பலவாறாக விமரிசிக்கப்பட்ட 7ம் அறிவு பற்றிய என் விமர்சனம் அல்லது கருத்துக்கள்.

எடுத்துக்கொள்ளப்பட்ட விசயம்(போதிதர்மர்) அற்புதமானது. அதை எடுத்த விதம் (making) தான் அனைவரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

படம் பார்க்கலாமா? கண்டிப்பாக பார்க்க வேண்டும். (read last paragraph to know why)

த‌ம் முன்னோர்களின் பெருமையை அறிய எந்த சமூகமும் ஆசைப்படும். நாமும் தான். ஆனால் தமிழர் என்றொரு இனமுண்டு அவர்க்கு தனியே ஒரு குணமுண்டு. அது, நான் நினைக்கிறேன் தம்மை தாமே தாழ்த்தி மகிழ்வது, அடுத்த நிலைக்கு செல்ல முயற்சி செய்பவர்களை காலை பிடித்து இழுத்து கீழேதள்ளி "நான் அப்பவே சொன்னேன்" என்று எள்ளி நகையாடுவது. இதைத்தான் பெரும்பாலான விமர்சனங்கள் நிருபிகின்றன.

படத்தில் ஒரு (message) செய்தி சொல்ல வேண்டும் என்று பல இயக்குனர்கள் ஆசைப்படுவர். இது ஒரு வரலாற்று செய்தியை(fact) கற்பனை கலந்து சொல்ல முயன்ற திரைப்படம். இம்முயற்சி வரவேற்கப்பட வேண்டியது. நிகழ்கால கதைகளங்கள், நிகழ்வுகள் மேல் புனையப்பட்ட கதைகள் தமிழ் திரைஉலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், கடந்தகால அல்லது எதிர்கால நிகழ்வு/களம் பற்றிய திரைப்படங்கள் தமிழ் திரைஉலகில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று.

இவ்விதமான படங்கள் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டால் இங்கு ரசிக்க ஆள் உண்டு, மொழிமாற்றம் செய்யப்பட்டால் கூட இங்கு எடுபடுவதில்லை.

எம் ஜி அர், Sivaji காலத்திற்கு பின் இவ்விதமான கதைகளை எடுக்க சரியான இயக்குனர்கள் இல்லை, இக்காலத்தில் இது எடுபடாது என்று அனைவரும் நினைப்பது தான் முக்கிய காரணம். எனவேதான் இந்த படமும் நிகழ்கால படமாக எடுக்க தகுந்த கதையாக உருமாற்றியுள்ளனர்.

போதி தர்மர், எப்படி வளர்ந்தார், அவரின் காலத்தில் எப்படி மக்கள் வாழ்ந்தார்கள், அன்று யார் அவருக்கு எதிரி அவரை எப்படி இவர் வென்றார் என்று படமெடுத்தால் இயக்குனருக்கும், கதாநாயக நடிகருக்கும், பேர் கிடைக்கும், விருது கூட கிடைக்கலாம், தயாரிப்பாளருக்கு கோவணம் கூட மிஞ்சாது. எனவே நிகழ்கால கதையாய் எடுத்தது நியாயமானது அல்லது தவறில்லை

போதி தர்மர் தமிழர் என்பது அல்ல படத்தின் முக்கிய புள்ளி, பெரும்பாண்மை தமிழர்கள் அதை அறியவில்லை என்பதே படத்தின் முக்கிய புள்ளி. இந்த புள்ளியை எப்படி தவறாக கையாண்டிருக்கிறார்கள் என்பதை காண்போம்.

ஒரு ஆச்சர்யமான விசயத்தை சொல்லி அதை வைத்து அப்படியே மக்களை மயக்கிவிடுது தப்பில்லை ஆனல் இது ஆச்சர்யமான விசயம் என்பதே போதும் படம் வெற்றி பெற்று விடும் என்று இவர்கள் மயங்கி விட்டார்கள். ஒரு அற்புதமான விசயம் படம் எடுக்க கிடைத்தால் அது வெற்றியை மாபெரும் வெற்றியாக்கும், ஆனால் முதலில் வெற்றி பெற தேவையான விசயங்கள் செய்யாவிட்டால் படுதோல்வியைத்தான் தரும். இந்த தவறைத்தான் இவர்கள் செய்திருக்கிறார்கள். இதுதான் ஒருவரி கதை, சூர்யா கதாநாயகன், இவர் தயாரிப்பாளர் என்று வேறு யாரிடமோ படத்தை ஒப்படைத்து இயக்க சொல்லிவிட்டாரோ முருகதாஸ் என நினைக்கத்தோன்றுகிறது. படம் பலர் இயக்கிய படம்போலுள்ளது. ஒரு தேர்ந்த இயக்குனரின் படம் என நம்ப மனம் வரவில்லை.


இதில் நகைச்சுவை நடிகர் இல்லை ஏனென்றால் இயக்குனர், கதை, திரைக்கதையை விட நகைச்சுவை வேறு தேவை யில்லை என முடிவெடுதிருப்பார் போல.

அந்த நகைச்சுவையை பார்ப்போம். இந்தியா, சீனாவிடம் "நீங்க என்ன சொன்னாலும் செய்ரொம்"ன்னு நிக்கவைக்க, இந்தியாவில் உள்ள ஒரு நாய்க்கு ஒரு ஊசி போடனும், தவிர ஒரு கல்லூரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவியை கொல்லவேண்டும். (oh my god) ஒரு நாட்டிற்க்கு இது எல்லாம் ஒரு கொசுவை அடிக்கிற அளவு சிறிய வேலை. அதை செய்ய ஏன் ஒரு நோக்கு வர்மம் தெரிந்த நிபுணன் வரார், போன்ற கேள்விகளை 7ம் அறிவிடம் கேட்போம்

நாம்: இருப்பதில் பெரிய வேலை அந்த மருந்தை இந்தியாவிற்குள் கொண்டுவருவது தான். நாயிக்கு ஊசி போடுரது சின்ன வேலை, பெரிய வேலையை செய்ய சாமர்த்தியம் உள்ளவர், நாயிக்கு ஊசி நடுரோட்டுல வச்சிதான் போடனுமா? அதை விசாரிக்கிற போலிஸ் கிட்ட, பொய் சொல்லி, லஞ்சம் கொடுத்து தப்பிக்க முடியதா? ஏன் போலிஸை கொல்றார்?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி ஊசியை ஏன் இவனே போடுறான், 300 கோடி வாங்கினவன் செய்யலை?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்: சரி ஒரு veterinary மருத்துவரை நோக்கு வர்மத்தால் வசப்படுத்தினால் பல நூரு நாயிக்கு போடலாமே
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி நாய்க்கான ஊசி மருந்தில் இதை கலந்தால் பல ஊர்களில் ஒரே நேரத்தில் நோயை பரப்பலாமே
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி நாயிக்கு ஊசி போட போலிஸ்காரர் பலரை வில்லன் கொன்றானே அதன் பின் அரசு என்ன‌ செய்கிறது?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,

நாம்:........:(

நாம்:அந்த வில்லன் நோக்கு வர்மத்தால் சாலையில் செல்லும் அத்தனை பேரையும் தூண்டி இவர்களை கொல்ல முயர்சிக்கிறான், ஆனால் பின்னர் ஆராய்ச்சிக்குதேவையானதை வெளியிலிருந்து செய்து தரும் மாலதியை பிடித்தபின் அவளை நோக்கு வர்மத்தால் கட்டுப்படுத்தி மற்றவர்களை வெளியே வரவைத்து சுட்டுக்கொல்ல செய்யலாம், அல்லது இம்ரான் என்பவனை பிடித்தபின் அவன் தானே நடந்து சென்று கார்களின் மீது மோதி இறக்கிறான், பதிலாக அவனை வைத்து மற்றவர்களை கொன்றிருக்கலாம். ஏன் செய்யவில்லை?

7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி, வில்லன் பற்றி அறியும்முன்னெ கதாநாயகி, கதாநாயகனை 1 வருடமாய் தேடி வருகிறாள், வில்லன் வந்திருக்காவிட்டால், அந்த ஆராய்சி என்ன ஆகிருக்கும், எதை சாதிப்பதர்கான ஆரய்ச்சி, உதாரணமாக AIDS க்கு மருந்து இப்படி எதாவது ஒன்று இருக்கவேண்டுமல்லவா அது என்ன?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,

here, let us stop asking 7th sense


இப்படிபட்ட மோசமான கதை ஒரு மோசமான மசாலா படத்தில் கூட இருக்காது

ஒரு பிரம்மாண்ட படம் எப்படி எடுக்கப்படக்கூடாது என்பதற்கான பாடம் இது

தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாய் செய்தவர்கள் முறையே, தயாரிப்பாளர், கதாநாயகன், இசைஅமைப்பாளர். மற்றவர்கள் தூங்கிவிட்டார்கள், காமிராவும், வசனமும் சில இடங்களில் சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறது அவ்ளோ தான்

திரைக்கதைப்படி, நாயகிதான் படத்தை தோளில் தூக்கிச்செல்லவேண்டும், எந்த விதத்திலும் பொருந்தாத ஒருவரை நாயகியாக தேர்வு செய்ததின் மர்மம் என்னவோ, பிறப்பால் தமிழர் என்பதை தவிர; அவரின் உச்சரிப்பை அவர் தமிழர் இல்லை என்றால் மன்னித்திருக்கலாம் ( " ...மேல வேல் படக்கூடாது" = வெயில் படக்கூடாது" என்று அறிவீராக).   நடிப்பு?  கிலோ என்ன விலை ரகம்தான். நடிகையை நாயகியாக நிலை நிறுத்தும் வேலையை திரைக்கதை செய்யத்தவறி விட்டது


உண்மையில் படத்தில் நடிகர் சூர்யா தான் படத்தை தோளில் தனி ஒருவராய் சுமந்து செல்கிறார். அவர் ஒரு சில இடங்களில் ஆங்கிலம் படிக்காதவர் போலவும், சில இடங்களில் ஆங்கிலம் அருமையாய் பேசுகிறவராகவும் காட்டுவது மிக அபத்தம்.

இதுபோன்ற விசயங்கள், இது பல சமையற்காரர்களால் கெடுக்கப்பட்ட சாப்பாடு என சந்தேகத்தைக் கிளப்புகிறது, ஒருவர் அருமையாய், "மாதங்களில் அவள் மார்கழி" என்று கொண்டு போகிறார், அடுத்தவர், "சாதங்களில் அவள் தயிர்சாதம்" என சொதப்புகிறார்.

மொத்தத்தில், போதிதர்மர் என 5 STAR HOTEL LABEL ஒட்டப்பட்ட சாப்பாடு பார்சல் உள்ளே, நாளான, கெட்டுப்போன எலுமிச்சை சாதம்.

என்றாலும், அன்னா ஹசாரே, சரியானவரோ, தப்பானவரோ, அவரின் செய்கைகள் ஊழல் எதிர்ப்பு பற்றி அனைவரையும், சிந்திக்க, பேச வைத்தது, அது போல் இப்படமும் தமிழ‌ர்கள் தங்கள் பாரம்பரிய பெருமை பற்றி உணர, சிந்திக்க ஒரு காரணமாய் அமைந்துள்ளதால் இப்படத்தை பாருங்கள்.

No comments:

Post a Comment