எச்சரிக்கை: இது ஈழ கருணாவைப் பற்றியதல்ல !
திமுக, 2011 தேர்தலில் ஆட்சியை பிடிக்காது என்று முதலில் அறிந்தவர், திரு. கருணாநிதி தான் என்று நினைக்கிறேன். ஆகவே அவர் நிறைய கண்ணி வெடிகளை புதைத்து விட்டு வந்துள்ளார்.
அடுத்து வரும் முதல்வர் கால் (கை) வைக்கும் இடமெல்லாம் பிரச்சனை வெடிக்க வேண்டும், எவ்விதம் முடிவெடுத்து செயல்பட்டாலும் அது பிரச்சனை கிளப்பவேண்டும் என்று திட்டமிட்டு செயல் பட்டது போல் தெரிகிறது.
இதை படித்த உடனே அவரின் ராஜதந்திரம் என போற்ற நிறைய பேர் கிளம்பி விடுவார்கள். இந்த மாதிரி முட்டாள் தனமான புகழ்பாடி களால் தான் தமிழ் நாட்டில் தினமும் ஒரு "வருங்கால முதல்வர்" உருவாகிறார்.
முதல் வெடி:
புதிய கட்டிடத்தில், சட்டசபை செயல் பட வேண்டுமானால் கட்டிட பணி முடிய வேண்டும். கட்டிட பணி முடிய வேண்டுமானால் கோடிக் கணக்கில் செலவு செய்ய வேண்டும். தேவையான செலவுகளுக்கே நிதி இல்லாத போது, கட்டிட பணி செய்ய நிதி ஒதுக்க முடியாது. என்வே பழைய கட்டிடத்தில் செயல் பட புது முதல்வர் முடிவு செய்வார், அங்கே எப்படி ஆப்பு வைப்பது என்று யொசித்து அங்கே "செம்மொழி நூலகம்" அமைத்தார். இதை வேறு இடத்திற்கு மாற்றாமல், இங்கு சட்டசபை செயல் பட இயலாது, இதை மாற்றினால் பார்பனர், தமிழுக்கு எதிரானவர்ன்னு பிரச்சனை எதையாவது கிளப்பி விடலாம் என்று செம ப்ளான்.
ஆனால் ஜெ, அதை வெற்றிகரமாக சமாளித்துள்ளார்.
அடுத்தது, பள்ளிக் கட்டணம். அதை விட பெரிய வெடி, சமச்சீர் கல்வி.
பேரை கேட்டாலே சும்ம அதிரும்லன்னு வைத்த வெடி இது. சமச்சீர் கல்வி, 1, 6 வகுப்புக் களுக்கு ஏற்கனவெ அறிமுகப் படுத்தியாச்சி அவர் ஆட்சியிலேயே!. அது ஏன் 1, 6 மட்டும்? புதிய பாடத்திட்டம் அறிமுகமாக்கும் பொழுது கடைப்பிடிக்கப் படும் மரபு. 1, 6 வகுப்பு மாணவன் அடுத்த கல்வியாண்டுக்கு வரும்போது அவனுக்கு புது பாடத்திட்டம் கிடைக்கும், அதாவது 2,7 க்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும். அது அவ்வாறே தொடர்ந்து, 3,8; 4,9; 5,10; என தொடரும் கல்வியாண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்.
இவரு 2,7 மட்டுமல்ல எல்லா வகுப்புகளுக்கும் இந்த 2011-12 கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்த திட்டமிட்டார். அது மட்டுமல்ல, பாடத்திட்டம் அறிமுகமானால் புதிய பாடம் (subject) உதாரணமாக பொருளியல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். அதில் பல நடைமுறைச் சிக்கல்களை, பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும்.
இப்போது விசயம் நீதிமன்றத்தில் உள்ளதால், தீர்ப்பை பொருத்து ஜெ செயல்பட்டால் போதும், எது பிரச்சனை என்றாலும் நீதிமன்ற வழிகாட்டலோடு தப்பித்து விடலாம்,
என்ன கண்ணைக் கெட்டுதா?
கருணாவின் கண்ணி வெடிகள் - பாகம் 2 சில நாட்களுக்கு பின் தொடரும் !
No comments:
Post a Comment