பகுதி ஆ பிரசுரிக்க தாமதமானதற்கு மன்னிக்கவும் !
ஹைக்கூ அனைவருக்கும் புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.
அடுத்தது.. வசன கவிதை!
உலகிலேயே மிக எளிதானதும், மிக கடினமானதும் இது தான்!!!
அது எப்படின்னு கேட்கிறீர்களா?
எழுத எளிதானது.. ஏன் ##கடினமென்று இறுதியில் கூறுகிறேன்.
முதலில் உதாரண கவிதையய் பார்ப்போம்
*********************************
கட்டுரைகளுக்கு
முக்கியம்
பத்தி பிரித்தல்
அது அவசியமில்லை இங்கு
ஆனால்
பிரித்தல் எளிது
இங்கு வரி
மிக முக்கியம்
எனினும் அது
நாமாக
பிரித்தால் வரி
அது ஒருவேளை
கவிதையை
கெடுக்கலாம், எனவே
விட்டுவிட வேண்டும்.
நாம் அதை கடவுளிடம்
***************************
வழக்கம்போல் முதலில் ஒரு பொருள் (subject) தேர்ந்தெடுக்கனும் ! அதைப் பற்றி ஒரு 6 வரிகள் வருமாறு கட்டுரை எழுதவேண்டும். கட்டுரையான்னு கேக்கக்கூடாது. ஆரம்ப காலத்தில், முடிந்த வரை சிறிய வாக்கியங்களை கொண்டு எழுதுவது நல்லது. அதுவும் யாரிடமாவது பேசும் தொனியில் இருத்தல் நலம்.
கட்டுரைகளுக்கு பத்தி பிரித்தல் முக்கியம். ஆனால் இங்கு அது அவசியமில்லை. இங்கு வரி பிரித்தல் எளிது, எனினும் அது மிக முக்கியம். நாமாக வரி பிரித்தால் அது ஒருவேளை கவிதையை கெடுக்கலாம், எனவே நாம் அதை கடவுளிடம் விட்டுவிட வேண்டும்.
(கடவுளை நம்பாதவர்கள் இயற்கையிடம் விடுங்கள்.) கடவுளிடம் விடுவது என்றால், நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
கணினியில் எழுதியவர்கள் இங்கு படிக்கவும்
முதலில் cursor கட்டுரையின் முதல் வார்த்தைக்கு அடுத்து நிறுத்துங்கள், ஒரு enter அடிக்கவும். பின் கண்ணை மூடிக்கொண்டு cursor மேலும், கீழும், இடம், வலம் என இஷ்டத்திற்கு move செய்து தோணும் இடத்தில் எல்லாம் enter அடிக்கவும். Enter அடித்தது போதும் என தோன்றிய பிறகு கண்ணை திறக்கவும். எதேனும் ஒரு வரியில் மூன்று வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் அதை மீண்டும் உடைக்கவும். மொத்தம் எத்தனை வரிகள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
தாளில் எழுதுபவர்கள் இங்கு படிக்கவும்
முதலில் கட்டுரையின் முதல் வார்த்தைக்கு அடுத்து பென்சிலால் / போல கோடிடுங்கள், பின் கண்ணை மூடிக்கொண்டு மேலும், கீழும், இடம், வலம் என இஷ்டத்திற்கு நகர்ந்து தோணும் இடத்தில் எல்லாம் பென்சிலால் / போல கோடிடுங்கள். பென்சிலால் கோடிட்டது போதும் என தோன்றிய பிறகு கண்ணை திறக்கவும். எதேனும் ஒரு வரியில் மூன்று வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் அதை மீண்டும் உடைக்கவும். மொத்தம் எத்தனை வரிகள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
இனிதான் முக்கியமான வேலை இருக்கு.. ஒரு வாக்கியத்தின் துண்டுகளை அவற்றிற்குள் வரிசை மாற்றி போடுங்கள். கட்டுரையின் முதல் வாக்கியம், கவிதையில் 4 வரியாய் மாற்றியிருந்தால், 1234 வரிசைக்கு பதிலாக 1324 or 1243 etc என்று வரியின் வரிசை மாற்றுங்கள், அப்போ தான் kick கிடைக்கும். அதே போல் கட்டுரையின் எல்லா வாக்கியங்களுக்கும் செய்யவும்.
நீங்கள் கவிதை எழுதிமுடித்தாயிற்று !! அவ்ளோதானான்னு கேக்காதிங்க.. அவ்ளோதான்..
வசன கவிதை தயார்... நடிகர் விஜய் யெல்லாம் பெரிய Dancer ன்னு பேர் வாங்கும் போது நீங்கள் பெரிய கவிஞர்ன்னு பேர் வாங்க முடியாதா? விடாமல் முயற்சிக்கவும், கவிதை வராவிட்டாலும் பேர் கிடைக்கும்
உதாரண கவிதை மேலே சிகப்பு நிறத்திலிருக்கும் பத்தியிலிருந்து இங்கே சொல்லியபடி உருவாக்கப்பட்டது.
##படித்து ஜீரணம் பண்ணுவது தான் கடினம்
cycle gap la vijay damage paniteenga ! blogword has a lot vijay fans ... take care !
ReplyDelete