சில வலைப்பூக்கள் நான் அடிக்கடி பார்ப்பதுண்டு அதாவது "தொடர்வதில்லை" ஆனால் தேடுதளத்திலோ, தமிழ்மணத்திலோ தேடி தேடி தான் ஒவ்வொரு முறையும் செல்வது வழக்கம். இது தலையைச் சுத்தி மூக்கை தொடும் வேலைதான் ஆனால் அப்படித்தான் போகிறேன். இனி அவைகளை "தொடர" இருக்கிறேன். சம்மந்தப் பட்டவர்கள் ஜாக்கிரதையாக(?) இருக்கவும் !
நான் மதிக்கும் இருவரின் வலைப்பூக்கள்:
http://classroom2007.blogspot.com/
http://parppu.blogspot.com/
இரண்டும் ஜோதிடம் பற்றியதுதான், ஒருவர் விவசாயம் சொல்லித்தருகிறார், மற்றவர் சாப்பாடு போடுகிறார்.
இரண்டும் முற்றிலும் இலவசம்.
அடுத்த இரு வலைப்பூக்கள்
http://charuonline.com/
http://venkatarangan.com/
சாரு வின் புத்தகங்கள் படித்ததில்லை, வலையில் கிடைத்த விமர்சனங்கள் அவரை படிக்கத் தூண்டுகின்றன. விரைவில்..
இவரின் (வருண்) பார்வை என் பார்வை போல இருக்கிறது, ஆனால் ஆங்காங்கே சறுக்குகிறார்.
http://timeforsomelove.blogspot.com/
இன்னும் சிலவற்றைத் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைத்தவுடன் அவர்களையும் "தொடர" இருக்கிறேன்.
பல நண்பர்கள், வலை விலாசம் வேறாகவும், வலைப்பூவின் பெயர் வேறாகவும் வைத்திருப்பதால் என் தேடுதல் இன்னும் தாமதப் படுகிறது.
No comments:
Post a Comment